விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுக்கிரவார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ரோடு, பஸ் வசதி இல்லாத காரணத்தினால் தினமும் 3 கிலோ மீட்டர் துாரம் நடந்து பள்ளி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.அதீவிரன்பட்டி, சானார்பட்டி போன்ற சுற்று பகுதி மாணவர்கள் சுக்கிரவார்பட்டி அரசு உயர் நிலை பள்ளியில் படிக்கின்றனர்.
450 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டாக 10 ம் வகுப்பில் முழு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளி செல்ல ரோடு, பஸ் வசதி இல்லாததால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
மழை நேரங்களில் அர்ஜூனா நதியில் தண்ணீர் வரும் போது மாணவர்கள் ஆபத்தான தடுப்பணை மேல் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது . இது தவிர வேறு பாதையில் பள்ளி வந்தடைய வேண்டுமானால் எம்.புதுப்பட்டியை சுற்றி 8 கிலோ மீட்டர் துாரம் நடந்தும், பஸ்சிலும் செல்ல வேண்டியது உள்ளது. அவ்வழித்தடத்திலும் முறையான பஸ் வசதிகள் கிடையாது. இப்பிரச்னையை தீர்க்க முறையான ரோடு, பஸ் வசதிகள் செய்து தர வேண்டும்.
No comments:
Post a Comment