தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்களின் பேட்டியில், அரசின் விலையில்லா நலத்திட்டங்களின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் பொருட்கள் அனைத்தும் பள்ளிகளிலேயே கொண்டு சென்று வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தீபாவளியை அடுத்த வரும் தீபாவளி நோன்பு அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டது, இதுகுறித்து அரசிடம் முறையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குனர் உறுதியளித்தார்.
பள்ளிகளில் உள்ள கூடுதல் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், ஆங்கிலவழி பள்ளிகளில் புதிய பணியிடங்கள் தோற்றுவித்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனரை வலியுறுத்தப்பட்டது. புதியதாக தரம் உயர்த்தப்படவுள்ள உயர்நிலைப்பள்ளிகளில், சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துகொள்ளவது அல்லாமல் ஒன்றியத்தில் மற்ற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களையும் ஈர்த்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது, இதனால் பணியிறக்கம், பணப்பலன் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாது வகையில் நடவடிக்கை மேற்கொள்ள் இயக்குனரை வலியுறுத்தப்பட்டது.
1 comment:
Friends can anyone tell me, in Tiruvannamalai Dist where are BC,MBC welfare schools? Please share me and help me.
Post a Comment