Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Friday, October 3, 2014

  ஆங்கிலத்தில் பேசுவதல்ல ‘சாப்ட் ஸ்கில்ஸ்’!

  கல்வி மலருக்கு சென்னை, இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி அளித்த சிறப்பு பேட்டி:

  * ஐ.ஐ.டி., துவங்கப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்தவிட்ட போதிலும், அதன் அடிப்படை நோக்கம் நிறைவேறிவிட்டதா?

  உயர்தர தொழில்நுட்ப கல்வி வழங்கவும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்காகவும் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற சர்கார் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதுதான் ஐ.ஐ.டி., என்கிற இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி. 1970ம் ஆண்டுகளிலேயே சர்வதேச அளவிலான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  ஆனால், குறைவான எண்ணிக்கையிலேயே நடந்தன. அப்போது கட்டடங்கள், தரமான ஆய்வகங்கள் நிறுவ வேண்டியிருந்தது. ஆராய்ச்சி செய்ய உதவித்தொகை வழங்குவதும் அவசியமாகிறது. இவற்றிற்கு அதிக நிதி தேவைப்பட்டது. அதனால் ஆய்வுகள் குறைவாக இருந்தன.

  இந்தியா வளர, வளர ஆராய்ச்சிப் பணிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தற்போது சர்வதேச அளவிலான ஆய்வுகளுக்கான வசதிகளும் உள்ளன; அதற்கான மாணவர்களும் உள்ளனர். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெறுவதுபோல், ஆய்வுகளின் எண்ணிக்கை இங்கும் நடைபெறுகின்றன. கல்லூரியின் எந்த பகுதிக்கு போனாலும் அங்கு ஆராய்ச்சியாளர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அதேநிலை இந்தியாவிலும் தற்போது உள்ளது. 1946ம் ஆண்டின் கமிட்டி ரிப்போட்டில் இதே நோக்கம் உள்ளது.

  * கணினி, தொலைபேசி உட்பட பெரும்பாலான தொழில்நுட்பங்களும், அதற்கான பார்முளாக்களும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறதே?

  ஆராய்ச்சி பொதுவாக, பேசிக் மற்றும் டிரான்ஸ்லேஷனல் என இரண்டு வகைப்படும். அடிப்படை ஆய்வு, தற்போது சாதரணமாக தோன்றலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தற்போது பயன்படாமல் இருக்கலாம். ஆனால், அது எதிர்காலத்தில் பிரமாண்டமாக பயன்படலாம். அடிப்படை ஆராய்ச்சி அதிகமாக இருந்தால்தான் பிற புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். அதனால், விஞ்ஞானிகளிடம் அப்ளிகேஷனைப் பற்றிக் கேட்கக்கூடாது.

  அடுத்ததாக, ‘டிரான்ஸ்லேஷனல் ரிசர்ச்’ மிக முக்கியமானது. விலை, எனர்ஜி, வேஸ்டேஜ் போன்றவற்றை குறைக்கக்கூடிய புதிய நுட்பங்களை கண்டுபிடிப்பது அல்லது சிறந்த காரை உருவாக்குவது என இதுபோன்ற ஆய்வுகள் ஐ.ஐ.டி.,களில் அதிகளவில் நடைபெறுகிறது. தொழில் நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆண்டுக்கு ரு.55 கோடி வரை இவ்வாறான ஆய்வுகள் ஐ.ஐ.டி., சென்னையில் நடக்கின்றன. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., போன்றவற்றுடனும் இணைந்து ஏராளமான புராஜெட்கள் செய்கிறோம்.

  இந்த இரண்டையும் கடந்து, சிறிய வகை கேமராவை உருவாக்குவது, இஸ்ரோவுக்கு தேவையான பணிகளை செய்வது போன்ற ‘டிரான்பர்மேஷனல் ரிசர்ச்’, அனைத்து ஐ.ஐ.டி.,களிலும் நடைபெறுகிறது. துவக்கத்தில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன.

  வெளிநாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் வேறு; இந்தியாவில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் வேறு. நீர், மாசுபாடு போன்ற இந்தியா சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வு இங்கேயேதான் காணப்படும். அதற்கான தொழில்நுட்பங்கள் வெளிநாடுகளில் கிடைக்காது. வெளிநாடுகளில் மின்தடை இல்லை. இங்கு அதிகளவு மின்தட்டுப்பாடு உள்ளது. அதற்கான தீர்வும் நம்நாட்டிலேயேதான் கண்டறியப்படும்.

  * ஹூமானிட்டிஸ் படிப்புகளின் முக்கியத்துவம்...

  ஹூமானிட்டிஸ் அனைவருக்கும் மிக அவசியமானது. நமது நாட்டின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் அறிந்தால் தான் இன்ஜினியர்களாலும் திறம்பட செயல்பட முடியும். அவர்களது ஒவ்வொரு பணியிலும் நமது பண்பாடும் அடங்கியுள்ளது. எனவே, வெறும் தொழில்நுட்பத்தை மட்டுமே அறிந்திருந்தால் போதாது. அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் ஹூமானிட்டிஸ் படிப்புகள் இருக்க வேண்டும்.

  * உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து பின்தங்கி வருவதற்கான காரணங்கள்?

  வெளிநாடுகளில் ஒரு பல்கலையே மருத்துவம், சட்டம், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து படிப்புகளையும் வழங்குகிறது. நம்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கு எய்ம்ஸ், சட்டப் படிப்புகளுக்கு தேசிய சட்டப் பல்கலை, தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஐ.ஐ.டி., என ஒவ்வொரு படிப்புகளுக்கும் பிரத்யேகமாக சில கல்வி நிறுவனங்களை வைத்திருக்கிறோம். பொதுவாக, பல்கலைகள் கலை அறிவியல் படிப்புகளையே அதிகளவில் வழங்குகின்றன.

  இவ்வாறான சூழலில் வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அம்சங்களால், பட்டியலில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் ஐ.ஐ.டி.,கள் முதல் 50 இடத்தில் வருகின்றன. எனினும், நம் நாட்டிலேயே ஆய்வு செய்து கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் இந்த ‘ரேங்க்’ பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

  * ஜே.இ.இ., மதிப்பெண் அடிப்படையிலேயே ஐ.ஐ.டி., அட்மிஷன் நடைபெறும் நிலையில், பிளஸ் 2வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கக் காரணம்?

  ஒவ்வொரு கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறையில் வேறுபாடு உள்ளது. சில வாரியங்களில் மதிப்பெண் அள்ளி வழங்கப்படுகிறது. இதனால், ஒரு வாரியத்தின்கீழ் பெறப்படும் அதிக மதிப்பெண், பிற வாரியத்துடன் சமமானதாக இருக்காது. அதனால், ‘பர்சன்டைல்’ முறையையும் கடந்து, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர பிளஸ் 2வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.

  ஐ.ஐ.டி.,களில் சேர்க்கைக்கான ரேங்கிங் மதிப்பிடுகையில், ஜே.இ.இ., மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிற போதிலும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி பிளஸ் 2 மதிப்பெண் தற்போது 75 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  * பாதிக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு போதிய பணித் திறன் இல்லை; அதனால் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன; உண்மை நிலையும் அப்படித்தானே இருக்கிறது?

  பொதுவாக, ஆங்கிலத்தில் பேசுவதுதான் ‘சாப்ட்ஸ்கில்’ என்று இன்றைய இளைஞர்கள் பலரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசினால் போதாது. தாங்கள் நினைப்பதை, எந்த மொழியாக இருந்தாலும் தெளிவாக சொல்ல தெரிந்திருக்க வேண்டும். தொடர்பியல் திறன் என்பது நமது கலாசாரத்தோடு ஒன்றிப்போன விஷயம். முன்பு திருமணம், காதுகுத்து என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அனைத்து உறவினர்களும் குடும்பத்துடன் செல்வோம். அங்கு தங்களது உறவு முறைகளுடன் சகஜமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. சிறு வயதிலேயே மற்றவர்களிடம் பேசி பழகும் குணமும், பிரச்னைகளை அணுகும் திறனும் இயல்பாக வளர்ந்தது.

  ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்க மட்டுமே பெற்றோர் ஊக்குவிக்கின்றனர். அதற்காகவே, விடுமுறை நாட்களிலும் கூட விசேஷங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வது இல்லை. இவ்வாறு சமூகத்துடன் சம்பந்தமே இல்லாமல் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு எப்படி பேசிப் பழகும் திறனை ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்க முடியும்? சொல்லப்போனால், இவற்றை எந்த ஆசிரியர்களாலும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போது இது போன்ற திறனை அதிகம் எதிர்பார்க்கின்றன. ‘சாப்ட் ஸ்கில்ஸ்’ என்பது சிறுவயதில் இருந்தே பள்ளிகளிலும், குடும்பத்திலும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

  No comments: