புதியதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்த 245 பட்டதாரி ஆசிரியர்கள் செப்டம்பரில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உண்டு, உறைவிட, திறன் வளர் பயிற்சி இரண்டு நாள் நடந்தது.
பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு துவக்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, பழனியாண்டி, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் சுரேஷ்குமார், இடைநிலைக்கல்வி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment