
பெரம்பூர் சந்தையில் காய்கறிக் கடை வைத்திருந்து தனது நண்பரால் ஏமாற்றப்பட்டதால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 52 வயதான நாகர் என்பவர் இவர்களின் பார்வையில் பட்டார். தங்களிடமிருந்த சேமிப்புத் தொகையிலிருந்து 2,500ரூ முதலீடாகப் போட்டு அவருக்கு இந்த மாணவர் குழு ஒரு சிறு விற்பனைக் கடையை வைத்துக்கொடுத்துள்ளனர். ஒரு கோவிலின் அருகே படுத்து உறங்கி அங்கு கிடைக்கும் உணவை உட்கொண்டுவரும் இவரது விற்பனைப்பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அருகில் உள்ள சில கடைக்காரர்கள் சம்மதித்துள்ளனர். இதுபோல் சுயமாக சம்பாதிக்க விரும்பும் 30 பேரை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கிறதா என்று ரத்த சோதனை செய்து அவர்களைத் தேர்வு செய்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா டேனியல் தெரிவிக்கின்றார். இவர்களுக்கான துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காண தேவைகளைத் தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாக ரோஷினி என்ற மாணவி குறிப்பிட்டார். நகர மேயரை சந்தித்து இதுகுறித்து விளக்கியதாகவும், இவர்கள் தேர்வு செய்யும் பிச்சைக்காரர்களுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இந்த மாணவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் குறித்த தங்களின் அமைப்பைத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ‘பிச்சை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
1 comment:
தங்களின் நல்ல முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..
Post a Comment