Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 23, 2014

    5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்

    தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் உட்பட 4,963 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை கடந்த 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அன்றைய தேதியில் இருந்தே  www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. விண்ணப்பிக்க நவ., 12ம் தேதி கடைசி நாள். அதற்குள், மேலும் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டித் தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடத்தப்படும் தேர்வு என்பதால் ஒவ்வொரு முறையும், அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். சராசரியாக, 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். தேர்வில், 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர். இந்த முறையும் மொத்தமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: