Pages

Sunday, June 30, 2013

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்

ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது.

பள்ளி நேரம் மாற்றப்படுமா?.... போக்குவரத்து நெரிசல் குறையுமா? - நாளிதழ் செய்தி

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க, அனைத்து பள்ளிகளையும், காலை 8.30 மணிக்கே துவங்கிட, கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகளில் யோகா வகுப்புகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா?

"தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்" என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளிக்கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12.35 முதல் 1.05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கல்வியும் அளிக்க வேண்டும்.

வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில் மோசடியைத் தவிர்க்க, அரசு தற்போது விதித்துள்ள, கிடிக்கிப்பிடி உத்தரவால், பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாள்காட்டி வழங்குவதில் காலதாமதம், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குழப்பம் - Dinamalar

தொடக்க கல்வித்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி வேலை நாள்காட்டி வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை TNPSC, TRB அளிக்க நடவடிக்கை



அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன.

ஆசிரியர் தகுதி தேர்வு 5 லட்சத்துக்கும் மேல் குவிந்தது விண்ணப்பம்

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்தது. இந்த சட்டத்தின்படி 23.08.2010க்கு பிறகு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிகற்றல் முறை தொடர் பயிற்சி

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை வலுவூட்டல் பயிற்சி நடந்தது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறையிலும் 6-8ம் வகுப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் கல்வி

பாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் எண்

பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன.

ஆசிரியர்களுக்கு பாராட்டு

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த விழாவில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 11ம் ஆண்டாக, நேற்று, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை

இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Saturday, June 29, 2013

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள அல்டமாஸ் கபீரின் பதவிக் காலம் ஜூலை 19ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சதாசிவத்தை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசு அணை வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்" இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை1 கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 17-ம் தேதி

வகுப்புக்கு செல்லாமல் பட்டம், பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது: மனு

"வகுப்புக்கு செல்லாமல் பட்டம் பெறுபவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யவோ, வக்கீல் தொழில் புரியவோ அனுமதிக்கக்கூடாது" என, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் தரும் போக்குவரத்து பொறியியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பவர்கள் டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியர்கள். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில், பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு, வழங்கிய மதிப்பெண் பட்டியலை, திரும்பப் பெறுகின்றனர்.

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு

சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை

இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தனக்கென நாட்காட்டி

புதிய அகஇ மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை

டி.இ.டி., தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்

ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.

நெட் தேர்வு: சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு

யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு (நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு

சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்

ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,

மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது? - நாளிதழ் செய்தி

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு

"மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில், செப்.,25 ல், மறியல் நடத்தப்படும்" என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் தெரிவித்தார்.

மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை

"மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில...

*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

அடிப்படை வசதிகளற்ற பி.எட். கல்லூரிகள் மூடல்

"தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"

டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி

உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் டெல்லி மேல் சபை உறுப்பினர்களாக 6 எம்.பிக்கள் தேர்வு

தமிழ்நாட்டில் டெல்லி மேல் சபை உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிந்தை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்தெடுக்க இன்று மேல் சபை தேர்தல் நடைபெற்றது. பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று மாலை நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்:
பதிவான ஓட்டுகள்: 231

பதிவானதில் செல்லாத ஓட்டு: 1

அ.தி.மு.க. வேட்பாளார்கள்

வா.மைத்ரேயன் - 36 (வெற்றி)

கே.ஆர்.அர்ஜூனன் - 36 (வெற்றி)

டி.ரத்தினவேல் - 36 (வெற்றி)

ஆர்.லட்சுமணன் - 35 (வெற்றி)

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளையும், குறைபாடுகளையும்

அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை அறிவிப்பு

பொள்ளாச்சியில் அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளியில் கட்டண வசூல்?

ஓ.சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பெற்றோர்கள், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை...

ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும் உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது கேள்விக்குறியாகிவிட்டது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.

மாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்

பள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது. பாடவேளையை 40 நிமிடங்களாகக் குறைத்திருப்பதும் வழிபாட்டுக்குப் பிறகு தியானம், மதிய உணவுக்கு முன்பாக யோகாசனப் பயிற்சி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் என

''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''

''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். பல நாடுகளை சேர்ந்த பல ஆசிரியர்களை நான் பார்த்துவிட்டேன். பலர் ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக, வேலையாக தான் பார்க்கிறார்கள். சம்பளத்திற்கான‌ பணி அது, அவ்வளவே. ஒரு மருத்துவரை போல, வழக்கறிஞரை போல, நான் ஒரு ஆசிரியர் என்றே வாழ்கிறார்கள்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது

அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை

பிளஸ்–1 வகுப்புகள்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

Wednesday, June 26, 2013

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.

அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும், பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு

மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.

ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம

தர்மபுரி மாவட்ட அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முனியன் தலைமை வகித்தார்.

பி.எட்., பயிற்சிக்காக ஆசிரியர்கள் ஒரு மாதம் விடுப்பு : ஊராட்சி, நகராட்சி பள்ளி மாணவர்கள் பாதிப்பு - நாளிதழ் செய்தி

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக, விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற மாணவர்கள் தவிப்பு

கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு

இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 25, 2013

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு

* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013
 
* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013
 
* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013

இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதத்தை உயர்த்த கோரிக்கை-ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி

இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என கல்வி அமைச்சரிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சாதனை மாணவர்களுக்கு, முதல்வர் இன்று மீண்டும் பரிசு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 211 மாணவர்களுக்கும், இன்று கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் பரிசு வழங்குகிறார்.

மாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்

தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வுக்கட்டுரை போட்டியில் சிதம்பரம் மாணவி சாதனை

கூகுள் இணையதளம் நடத்திய, உலக அளவிலான, "அறிவியல் போட்டி 2013" ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

வீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர்த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கிவிட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்! 

எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லது தான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா? 

பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவாற்றல் குறைவு

ஐந்தாம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்குக் கணித அறிவாற்றல் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய அளவில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்

"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்

இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

"பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும்.

அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்

"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி

டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

வால்பாறையில் கனமழை: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்- 4: பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சியளிக்க உத்தரவு

குரூப்- 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள் நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளிதழ் செய்தி

பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி

தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல்

பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

பள்ளிக்கூட நேரத்தில் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Sunday, June 23, 2013

நிறைய மதிப்பெண் வேண்டுமா?

கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி தயாராகப் போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்

புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு 
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

"இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது"

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.

பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்

அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.

குழப்பத்தை குழி தோண்டி புதையுங்கள்...

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது, எந்தப் படிப்பை படித்தால் நல்லது, எந்த படிப்பு எளிதாக இருக்கும், எந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்கும், அதிக சம்பளம் தரும் படிப்பு எது என பல்வேறு கேள்விகள் மண்டையை குடையும்.

பாடம் நடத்த புத்தகம் இல்லை: பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி

பாடம் நடத்த புத்தகங்கள் வழங்கப்படாததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசு, 2011ம் ஆண்டில், பழைய பாடத்திட்டங்களை மாற்றி, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தியது.

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செய்திகுறிப்பில் நாளை முதல் அமுல்படுத்தபடவிருந்த பள்ளி நேரம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குநர்

தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (23.06.2013) மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜான்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநிலத் துணைத் தலைவருமான வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் முன்னிலை வகித்துக் கூட்டத்தை நடத்தினார்.

Saturday, June 22, 2013

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம்

இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.
குறுவள மையம் 3 நாட்கள் 
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014

பணிந்து, குனிந்து ஆசிரியர்கள்.... அமர்ந்து, நிமிர்ந்து கவுன்சிலர்கள்....

மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு, கவுன்சிலர்கள் முன்னிலையில் நடந்ததும், பங்கேற்ற ஆசிரியர்கள், அவர்கள் முன் பணிந்து, குனிந்து பதிலளித்ததும், வேதனையான விஷயம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” இதுபோன்ற பாடல்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நம் கவிஞர்களின் படைப்பாகும்.

சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர்

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.

காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் நாளை 22.06.2013 வழக்கம் போல செயல்பட உத்தரவு

நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  வேலை நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய நாள்காட்டியில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது.

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட

தொப்பையை மறையவைக்கும் கொள்ளு பற்றிய தகவல்!!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகளுக்கான கல்வியும் தரமானதாக இருக்கும் என கொள்கை வகுக்கப்பட்டது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை

பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.

தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படாததால் சிக்கல் நீடிப்பு - தினமலர்

தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது

நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது. பள்ளிக் கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் சங்கத்திற்கு மூவர் வீதம் அழைக்கப்பட்டனர்.

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைப்பு: மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்ட மதிப்பெண்ணிற்கு பதிலாக, 2 கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி

"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பள்ளியும், அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீலனை

தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: 20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்

இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.

Thursday, June 20, 2013

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி

டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம்.

உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு

"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்

"ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது" என, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார்.

பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும் கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு

அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்

பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியான மற்றும் இணையான கல்வித் தகுதிகள்

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

தேர்வுக்குழு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட வீராங்கனை

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில், இரண்டாம் இடத்தை பிடித்த வீராங்கனை, "மருத்துவ படிப்பில் சேர தகுதியில்லை" என தேர்வுக் குழுவினர், கடைசி நேரத்தில் அறிவித்ததால், அவரின், பி.இ., படிக்கும் வாய்ப்பும் பறிபோனது.

பிளஸ் 2 உடனடி தேர்வு: ஜூலை 20ம் தேதி ரிசல்ட்

மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது.

முதல்வர் விழா செய்தியை தவறாக கொடுத்த செய்தித்துறை

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவியருக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதுகுறித்த செய்தி குறிப்பை, செய்தித்துறை, தவறாக தயாரித்து வழங்கியது.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மறுகூட்டல், மறுமதிப்பீட்டில், "கட்-ஆப்" மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தங்கள் தர வரிசைப்படி, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு: சென்னை மருத்துவ கல்லூரிக்கு மவுசு

மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.

Wednesday, June 19, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்

இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினர் புரளி கிளப்புவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து உரியவர்களிடம் நாம் விசாரித்ததில் எங்களுக்கும் பல நண்பர்களிடம் தொலைபேசி அழைப்பு வாயிலாக இதுபோன்ற புரளிகள் வந்தவண்ணம் உள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் வலியுறுத்தாமல் பல்கலை இணைப்புக்கு பரிசீலிக்க உத்தரவு

"அண்ணா பல்கலையின் இணைப்பு பெற, ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் உத்தரவை வலியுறுத்தாமல், தனியார் பொறியியல் கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வளர்ந்துவரும் ஏவியேஷன் துறை - தேவைப்படும் சிறப்பு படிப்புகள்

வான்வழி தொழில்நுட்பங்கள் வணிகமயமாதலோடு கூடிய விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டு வரும் அபரிமித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை

"அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

6 குழந்தைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 6 குழந்தைகள் உயிரிழப்பு. அரசுப் பள்ளி மாணவர்களை ஷேர் ஆட்டோ ஏற்றிச் சென்றது.

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

சான்றிதழ் திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகள்: கல்வித்துறை எச்சரிக்கை

படிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம், புகாரின் அடிப்படையில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்கள் மீண்டும் இந்த வருடம் படிப்பை தொடர வாய்ப்பளிக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்படுகிறது.

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

சிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக்கு 2வது இடம்

நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு இடங்கள்- முடிவை நிறுத்திவைக்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில், விளையாட்டு ஒதுக்கீடு இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட முடிவை தாற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்காவை முந்திய சீனா

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் வெளியாவதில் கால தாமதம்

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை?

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம்.

Tuesday, June 18, 2013

பள்ளிக்கல்வித்துறை 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (மாதவாரியான தொகுப்பு)

DSE - 2013-14 WORKING & LEAVE LIST IN SINGLE PAGE CLICK HERE...

குறிப்பு : ஜூன் 3 தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதற்கு அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்தபின் சேர்க்கப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல்

மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட மூன்று இணை இயக்குநர் பணியிடங்களும் கடந்த நான்கு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.

இருமுறை நூறு சதவீதம் பெற்ற பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை

செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேவையான ஆசிரியர்கள் இன்றி கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்கள் நூறுசதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். செல்லியம்பட்டி, கொடுங்குன்றம்பட்டி, ஆலம்பட்டி, அம்மன்கோயில்பட்டி கிராமங்களைச்சேர்ந்த 200 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.

TAMIL NADU GOVT SCHOOLS COMPENSATORY SATURDAYS ANNOUNCED...

COMPENSATORY SATURDAYS ANNOUNCED

21.9.13

30.11.13

14.12.13

18.1.14

முப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை திறன்

பள்ளி பாடங்களுக்கு நோட்ஸ்கள் வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது. பாடச்சுமையை குறைக்க, 2012 முதல் முப்பருவ கல்வி, தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது 1 முதல் 8 ம் வகுப்பு நடைமுறையில் உள்ளது. இவ்வாண்டு முதல் 9ம் வகுப்பிற்கும் இம்முறை விரிவுபடுத்தப்பட்டது.

அதிக கட்டணம் வசூலிக்கும் மழலையர் பள்ளிகள்: கண்காணிக்குமா அரசு?

அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்" (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

படித்த மாணவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மோசடி

கோவையில் படித்தவர்களை குறிவைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகி வருகின்றன. போலீசார் கண்காணித்து, இவற்றுக்கு கடிவாளம் போடாவிட்டால், அப்பாவி மக்கள் பலரும் ஏமாற்றப்படுவர்.

கலை கல்லூரிகளில் விண்ணப்பங்களை விட சிபாரிசு கடிதங்கள் அதிகரிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர்களின் விண்ணப்பங்களை விட, அரசியல் கட்சியினரின் சிபாரிசு கடிதங்கள் குவிந்து உள்ளதால், கல்லூரி முதல்வர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம், ஐ.இ.எஸ்., தேர்வு நடத்த வேண்டும்

"மத்திய அரசு, ஐ.இ.எஸ்., (இந்தியன் எஜூகேசனல் சர்வீஸ்) தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களை, கல்வித்துறையில், கல்வி இயக்குனர்களாக நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெளியூர்களிலிருந்து B.E கலந்தாய்விற்கு சென்னை வருபவர்கள் கவனத்திற்கு...

 * வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி அருண் ஹோட்டலில் நடந்தது. மாநில தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பேரணி

22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கரூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்த தொடங்கிய பேரணிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி அமைப்பாளர் நன்செய் புகழூர் அழகரசன் மாநில பார்வையாளராக கலந்து கொண்டார்.

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

TNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்

Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013

Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schools from 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted at District Educational Offices only after obtaining proper acknowledgement

Kanyakumari

Tirunelveli

Tuticorin

Ramanathapuram

Sivagangai

Virudhunagar

Theni

Madurai

15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 58 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர் ஊதியக் முரண்பாடு உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் செப்25 முதல் தொடர் மறியல் நடத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுவில் முடிவு

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு உறுப்பினர் TNKALVI-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சென்னையில் உள்ள மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இப்பொதுக்குழு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்கவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து உள்ளிட்ட 7 அம்சக்

9 மற்றும் 10ம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10 முதல் 30வரை பயிற்சி

தமிழகத்தில் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம் தேதி ஆரம்பமாகிறது. தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.

சுத்தமான குடிநீரை லிட்டருக்கு 5 பைசாவிற்கே தரும் நானோ பில்டரை கண்டுபிடித்த தமிழன்!

 
இன்றைய உலகில் அதிகமாக பரவி வரும் ஒரு தொழில்நுட்பம் நானோ டெக்னாலஜி. அந்த தொழில் நுட்ப முறையில்(Nano filter), 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் பிரதீப். இவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.

6–வது ஊதிய குழுவின் முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 27–ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் போது ஏற்படும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறதா தேர்வுத்துறை? நாளிதழ் செய்தி

நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது. வினாத் தாள்களில் கேள்விக்கு ஏற்றாற்போல் விடையளிக்க இணைப்புகள் இல்லை. விடைத் தாள்களை தேர்வு மையத்திலிருந்து, திருத்தும் மையங்களுக்கு அனுப்பியபோது காணாமல் போனது, சேதமடைந்தது என, பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் பயிற்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் 4 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்ப விற்பனைக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பம் விற்பனை மையமாக, பள்ளிகளை பயன்படுத்துவதை, உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதனால், கல்விப்பணி கடுமையாக பாதிக்கும் என்றும், தலைமை ஆசிரியர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டி.இ.டி., தேர்வில் நுண்ணறிவை சோதிக்கும் வினாக்கள்

"ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள் நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில் நிபுணர்கள் பேசினர்.

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு

சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (17ம் தேதி) காலை, இணையதளத்தில் வெளியிடுகிறது. எனினும், இதனால், மாணவர்களுக்கு, பெரிய அளவில் எவ்வித பலனும் கிடைக்காது என, பல்கலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ படிப்பு: பொது பிரிவில் தொடரும் பி.சி., பிரிவினரின் ஆதிக்கம்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,) பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47 மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்

இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு: கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Saturday, June 15, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு தேர்வு எழுதியோர் எழுதலாமா?

தாள் 1 எழுத தகுதியானோர்:

1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.

தாள் 2 எழுத தகுதியானோர்:

1. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் (10+2+3) என்ற முறையில் பயின்று இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம்
>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிறனாளிகளுக்கு ரூ-250

தமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பற்றிய முழு விவரம் கோரி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிபுரியும் அலுவலகம், தற்பொழுது பணிபுரியும் ஒன்றியம் / அலுவலகங்கத்தில்

ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்! மோகனன்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாளில் 150-க்கு 122 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திவ்யா, இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்று தற்போது உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு தனது அனுபவத்திலிருந்து திவ்யா கூறும் யோசனைகள் இதோ...

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியிடுவதில் கல்வித்துறை மெத்தனம் - நாளிதழ் செய்தி

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், மாணவர்கள் சேர்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது

வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது.

World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event!!!

Photo: World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event......உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள், காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள் இனனந்து இதை செய்யபோகிறது. 15 கிலோமிட்டர் தூரத்தை நாளைக்காலை 6 முதல் 9 மணி வரை செய்ய திட்டமிட்டுருக்கிறார்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது கடந்த வருடம் எப்படி நடந்த்து / எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து தகவல்களும் இந்த சுட்டியை சொடுக்கினால் கிடைக்கபெறும்.https://docs.google.com/spreadsheet/viewform?fromEmail=true&formkey=dG9WZWhhU2VqMjhpQnd3Mm5pZE85UVE6MA இதனை ஆர்கனைஸ் செய்யும் ஒருவராய் நமது நண்பர் வீராஜ்குமார் சரவனண் ஆவார். Please SHARE and extend your support to preserve our home beach....உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள், காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள் இனனந்து இதை செய்யபோகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்

"வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும், ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.

பி.இ., சேர்க்கை கலந்தாய்வு 17ல் ஆரம்பம்: ஏற்பாடுகள் மும்முரம்

பி.இ. சேர்க்கை கலந்தாய்வு, வரும், 17ம் தேதி, அண்ணா பல்கலையில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை, துணைவேந்தர் ராஜாராம், மும்முரமாக செய்து வருகிறார்.

31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு

தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மாணவர்கள் கையில் உள்ளது: அப்துல் கலாம்

"இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். அவர்கள் கையில்தான் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உள்ளது" என, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பேசினார்.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் மாறிய விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி" பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்குமா என அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

ஊதியம், பணி சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பினர் கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரதத்தில், மாநில பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிதம்பரம் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.

Friday, June 14, 2013

பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் 17.06.2013 & 18.06.2013 ஆகிய நாட்களின் விநியோகம் செய்யப்பட உள்ளது

மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்து / வருகை புரியாது, தற்பொழுது இச்சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணபித்துள்ளவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம். தேர்வர்கள் தங்களது பத்து இழக்க விண்ணப்ப எண்ணை தெரிவித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, சென்னை-2, அண்ணாசாலை, மதராச-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பெற்றபிறகு, அதனை நகலெடுத்து (PHOTOCOPY) தங்கள் வசம் வைத்து கொள்ள வேண்டும். அசலினை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் முதல் நாளன்று தேர்வுமையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனுமதிச் சீட்டு வழங்கும் மையங்களின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.(கல்வி மாவட்டம் வாரியாக)

GOVERNMENT OF TAMIL NADU
                      DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI -6
HIGHER SECONDARY SPECIAL SUPPLEMENTARY EXAMINATIONS,        JUNE / JULY 2013
ISSUE OF ADMISSION CERTIFICATE TO THE PRIVATE CANDIDATES

Admission Certificates for private candidates for the Higher Secondary special supplementary Examination, June / July 2013 will be issued at the following  centres mentioned against each Educational District.

Sl.No.
Educational District
Admission Certificate Distribution Centre

1.
THUCKALAY
Govt. HSS, Thuckalay

2.
KUZHITHURAI
Govt.(G) HSS, Marthandam

3.
NAGERCOIL
S.L.B.Govt.Boys HSS, Nagercoil

4.
CHERANMADEVI
Govt.HSS, Cheranmadevi

5.
TENKASI
Govt.Boys HSS, Tenkasi

6.
TIRUNELVELI
M.D.T. Hindu College HSS, Tirunelveli

7.
KOVILPATTI
V.O.C.Govt.Boys HSS, Kovilpatti

8.
TUTICORIN
S.A.V.HSS, Tuticorin

9.
PARAMAKUDI
R.S..Govt.HSS, Paramakudi

10.
RAMANATHAPURAM
St. Andrew’s (G) HSS, Ramanathapuram