Pages

Saturday, June 15, 2013

பி.இ., சேர்க்கை கலந்தாய்வு 17ல் ஆரம்பம்: ஏற்பாடுகள் மும்முரம்

பி.இ. சேர்க்கை கலந்தாய்வு, வரும், 17ம் தேதி, அண்ணா பல்கலையில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை, துணைவேந்தர் ராஜாராம், மும்முரமாக செய்து வருகிறார்.
நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர, 1.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், "சீட்" கிடைக்கும் என்றாலும், இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, வரும், 17ம் தேதி துவங்குகிறது. 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை, விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடக்கிறது. கடந்த ஆண்டு வரை, இந்த பிரிவில், 100 இடங்கள் மட்டும் இருந்தன. முதல்வர் ஜெயலலிதா, 100 இடங்களை, 500 இடங்களாக உயர்த்தி அறிவித்தார்.

அதன்படி, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும், 500 இடங்கள், நிரப்பப்பட உள்ளன. மறுநாள், 20ம் தேதி, மாற்றுத் திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 21ம் தேதியில் இருந்து, ஜூலை, 30 வரை, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

நாளை மறுநாள், கலந்தாய்வு துவங்குவதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், துணைவேந்தர் ராஜாராம், முழுவீச்சில் கவனித்து வருகிறார்.

பந்தல் அமைப்பது, 20க்கும் மேற்பட்ட வங்கிகளின், "ஸ்டால்கள், கேன்டீன்" மற்றும் கலந்தாய்வு இடங்களை பார்வையிடுவதற்கான பிரத்யேக அறை என பல்வேறு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அனைத்துப் பணிகளும், கலந்தாய்வுக்கு முதல் நாளே முடிந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.