Pages

Sunday, June 16, 2013

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்

இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: இரண்டாம் ஆண்டு: ஜூன் 24 ல் இந்திய கல்வி முறை, 25 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும், 26 ல் தமிழ் கற்பித்தல், 27 ல் ஆங்கிலம் கற்பித்தல், 28 ல் கணக்கு கற்பித்தல், 29 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 1ல் சமூக அறிவியல் கற்பித்தல்.

முதலாம் ஆண்டு: ஜூலை 4 ல் கற்கும் குழந்தை, 5 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும், 6 ல் தமிழ் கற்பித்தல், 8 ல் ஆங்கிலம் கற்பித்தல், 9 ல் கணக்கு கற்பித்தல், 10 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 11 ல் சமூக அறிவியல் கற்பித்தல். தேர்வுகள் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.