Pages

Sunday, June 16, 2013

மருத்துவ படிப்பு: பொது பிரிவில் தொடரும் பி.சி., பிரிவினரின் ஆதிக்கம்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,) பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47 மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 19ம் தேதி துவங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், 200க்கு 200 மதிப்பெண் எடுத்து, முதலிடத்தைப் பிடித்த அபினேஷ் (திண்டுக்கல்) உட்பட, பி.சி., பிரிவைச் சேர்ந்த, ஏழு பேர், தரிவரிசை பட்டியலில் முதல், 10 இடங்களுள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த, இரண்டு ஆண்டுகளைப் போலவே, இம்முறையும், தரவரிசை பட்டியலில் முதல், 100 இடங்களில், 69 இடங்களை பி.சி., பிரிவினர் தக்க வைத்துள்ளனர். எம்.பி.சி., பிரிவினர், 17 பேர்; ஓ.சி., பிரிவினர், 9 பேர்; எஸ்.சி., பிரிவினர், 3 பேர்; பி.சி.எம்., பிரிவினர், 2 பேர், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளனர். முதல், 100 இடங்களை பிடித்துள்ளவர்களில், 47 பேர் மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் படிப்புகளில், தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறையில், ஓ.சி., பிரிவினரைக் காட்டிலும், சற்று குறைந்த, "கட்-ஆப்&' மதிப்பெண் பெறும், பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனினும், தரவரிசை பட்டியலில் முதல், 100 இடங்களில், அதிக இடங்களை பிடித்துள்ளதன் மூலம், பொதுப் பிரிவில், பி.சி., பிரிவு மாணவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.