Pages

Wednesday, June 19, 2013

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் வெளியாவதில் கால தாமதம்

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" என அண்ணா பல்கலைக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலையும், கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், "ரேங்க்" பட்டியலாக வெளியிட நடவடிக்கை எடுத்தது. "17ம் தேதி(நேற்று) காலையில், கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்" என பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்றிரவு, 8:00 மணி வரை, பல்கலை இணையதளத்தில், "ரேங்க்" பட்டியல் வெளியாகவில்லை. ஐகோர்ட் உத்தரவு நகல், இன்னும் பல்கலைக்கு கிடைக்கவில்லை என்றும், உத்தரவு நகல் கிடைத்தபின், அதை ஆய்வு செய்த பிறகே, கல்லூரிகளின், "ரேங்க்" பட்டியல் வெளியிடப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐகோர்ட் தீர்ப்பு குறித்து, சட்டத் துறையுடன், உயர்கல்வித் துறை, ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்ச்சி சதவீத அடிப்படையில், பட்டியலை வெளியிடும்போது, அதனால், ஏதாவது பிரச்னைகள் வருமா, ஒரு ஆண்டுக்கான தேர்ச்சி சதவீத பட்டியலை மட்டும் வெளியிடலாமா, அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி சதவீத விவரங்களை வெளியிடலாமா என்பது குறித்து, உயர்கல்வித் துறை, ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, "ரேங்க்" பட்டியல் வெளியாவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.