Pages

Wednesday, June 26, 2013

மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
 
மதுரையில் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நெரிசலை தவிர்ப்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மதுரையில் உள்ள 61 பள்ளிகளின் துவக்க நேரத்தை காலை 8:30 மணிக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.