Pages

Wednesday, June 26, 2013

ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம

தர்மபுரி மாவட்ட அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முனியன் தலைமை வகித்தார்.
பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ரவிசந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசும் போது, தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 3 சதமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 சதமும் கல்வியின் தரத்தை உயர்த்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கூட்டமைப்பு சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம், தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை உள்பட 14 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.