Pages

Wednesday, June 26, 2013

கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு

மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.

இந்தியாவின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு முறையான காப்புரிமை இல்லாத காரணத்தால் அது வெளிநாட்டவரின் சொத்தாக மாறிடும் அவலமும் நடக்கிறது. இனி வரும் தொழிற்சூழலில் காப்புரிமை என்பது, தனி நபருக்கும், நிறுவனங்களுக்கும் கட்டாயத் தேவையாக மாறிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில் காப்புரிமை வழங்குவதற்கான உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உள்ளன. இத்துறைக்கென படிப்புகளும் உள்ளன.

பேடன்ட் லா அண்டு பிராக்டிஸ் பட்டயப் படிப்பு

ஒரு ஆண்டு படிக்கக்கூடிய இந்தப் படிப்புகளை, அறிவியல் மற்றும் சட்டம் படித்த மாணவர்கள் படிக்கலாம். இதில் காப்புரிமை பெறுவது, ஏற்கனவே காப்புரிமை பெற்ற அம்சங்களை உபயோகித்து தனி நபரும், நிறுவனங்களும் பணம் ஈட்டும் முறை, காப்புரிமையை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது மற்றும் மாற்றியமைத்தல் போன்றவை தொடர்பானது.

காப்புரிமை சான்றிதழ் படிப்பு

நான்கு மாதங்களில் முடிக்கக் கூடிய சான்றிதழ் படிப்பானது ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். இதை வக்கீல், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், கம்பெனி செகரட்டரி, மருத்துவர், மருந்தியலாளர், மருத்துவ ஆய்வாளர், பயோ டெக்னாலஜிஸ்ட், பொருட்களை வடிவமைப்போர், மீடியா திறனாளர்கள் ஆகியோர் படிக்கலாம்.

காப்பி ரைட், டிரேட் மார்க், டிரேட் சீக்ரெட், இன்டஸ்ட்ரியல் டிசைன் போன்றவற்றைப் பெறுவது, பாதுகாப்பது தொடர்பாகவும் பாடங்கள் உண்டு. மேலும் விபரங்களுக்கு www.giipinfo.com என்ற இணையதளத்தை காணவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.