தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (23.06.2013) மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜான்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநிலத் துணைத் தலைவருமான வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் முன்னிலை வகித்துக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தின்போது பின்வரும் பொருள்கள் குறித்துப் பேசப்பட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்கப்பட்டன.1) செப்டம்பர் 25 முதல் சென்னையில் நடைபெறவுள்ள தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் பெருவாரியான ஆசிரியர்கள் கலந்து கொள்வது.
2) வட்டார வாரியாகப் போராட்டக்குழு அமைத்தல்.
3) பவானி வட்டாரக் கிளை சார்பில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் பவானி TESTF நகரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெயரில் கிரயம் செய்துள்ள அடிமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் வட்டாரக் கிளை அலுவலகம் கட்ட சூலை 7ஆம் தேதி அடிக்கல் நாட்டல். அகில இந்தியப் பொதுச் செயலாளர் திருமிகு சு.ஈசுவரன் அவர்கள் அடிக்கல் நாட்டி, போராட்ட விளக்கவுரை ஆற்றுதல்.
4) 2013-14ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை
5) அந்தியூர் வட்டாரப் புதிய செயலாளர் பதவியேற்பை அங்கீகரித்தல்.
6) மாநிலப் பொருளாளர் பதவியேற்புக்கு வாழ்த்துத் தெரிவித்தல்.
7) தற்போதுள்ள பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால் தணிக்கையை முடித்து, ஜனநாயக முறையில் வட்டார, மாவட்டத் தேர்தலை நடத்திட ஆயத்தமாதல்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைவருக்கும் ஹோட்டல் சரவணபவனில் விருந்தளிக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தங்கராஜ் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவுசெய்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.