Pages

Thursday, June 20, 2013

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மறுகூட்டல், மறுமதிப்பீட்டில், "கட்-ஆப்" மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தங்கள் தர வரிசைப்படி, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மருத்துவப் படிப்பிற்கான முக்கிய பாடங்களின் விடைத்தாளை, மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ததில், "கட்-ஆப்" மதிப்பெண் மாற்றம் பெற்ற, 120 மாணவர்களின், திருத்திய தரவரிசை பட்டியல், கடந்த, 17ம் தேதி, வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மேலும், 436 மாணவர்களின், திருத்திய தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப் பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு கலந்தாய்வு துவங்கி உள்ள நிலையில், இவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்ப இயலாது.

எனவே, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப்படி, தகுதியுள்ளவர்கள், வரும், 22ம் தேதி வரை நடைபெறும், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தங்களுக்கான குறிப்பிட்ட நாளில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வு துவங்கி, இரண்டு நாட்கள் முடிந்துள்ள நிலையில், சிறப்பு பிரிவில், 49; பொதுப் பிரிவில், 499 என, அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 548 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி உள்ளன என, துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.