Pages

Thursday, June 20, 2013

முதல்வர் விழா செய்தியை தவறாக கொடுத்த செய்தித்துறை

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவியருக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதுகுறித்த செய்தி குறிப்பை, செய்தித்துறை, தவறாக தயாரித்து வழங்கியது.
பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த இரண்டு பேருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த, இரண்டு பேருக்கு, 30 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற, ஒன்பது மாணவர்களுக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் என, 3.4 லட்சம் ரூபாய் பரிசு;பத்தாம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 2.25 லட்சம் பரிசு மற்றும் சாதித்த மாணவர்களின் உயர்கல்வி செலவை, தமிழக அரசு ஏற்பதற்கான சான்றிதழ்களையும், முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த தகவல், செய்தித் துறை அளித்த, செய்திக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் எடுத்த மாணவ, மாணவியருக்கும், முதல்வர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி, பாராட்டினார் என்றும், செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், பத்தாம் வகுப்பில், இரண்டாம் இடம் பெற்ற, 52 பேர், மூன்றாம் இடம் பெற்ற, 137 பேருக்கு, முதல்வர், பரிசுகளை வழங்கவில்லை. 22 பேருக்கு மட்டுமே, முதல்வர், பரிசு வழங்கினார். 189 பேருக்கு, அமைச்சர் வைகை செல்வன், பரிசும், சான்றிதழ்களையும் வழங்க, டி.பி.ஐ., வளாகத்தில் ஏற்பாடு செய்து, கடைசியில், சர்ச்சையும், சண்டையுமாக, அந்நிகழ்ச்சி நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா ஏற்பாடுகளில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தலையிடவில்லை என்றும், இதில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்ட சில அதிகாரிகள் தான் ஈடுபட்டனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் கையால் பரிசு பெறும் மாணவர்கள் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில், அமைச்சரையோ அல்லது மாவட்ட கலெக்டர்களை வைத்தோ வழங்கியிருக்கலாம். ஆனால், முறையாக திட்டமிடாததால், பெரும் குளறுபடியில் முடிந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.