Pages

Wednesday, June 19, 2013

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்க் பெற்ற 13 மாணவ, மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவியருக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப் பத்திரத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்குவார் எனத் தெரிகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று ரேங்குகளை 198 மாணவ, மாணவியர் பெற்றனர். எனவே, அவர்கள் அத்தனை பேருக்கும் முதல்வரே நேரில் சான்றிதழ்களை வழங்குவது குறித்து முடிவுசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்குகள் பெற்ற 13 மாணவ, மாணவிகள் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவிகள் மட்டும் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்திக்க அழைத்துச்செல்லப்பட உள்ளனர். மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.