செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேவையான ஆசிரியர்கள் இன்றி கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்கள் நூறுசதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். செல்லியம்பட்டி, கொடுங்குன்றம்பட்டி, ஆலம்பட்டி, அம்மன்கோயில்பட்டி கிராமங்களைச்சேர்ந்த 200 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
2011-12 ம் கல்வி ஆண்டில் ஆங்கில ஆசிரியர் இல்லாமல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர் 35 பேர்.அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில் சமூக அறிவியல் ஆசிரியர்கள் இருவர் இல்லாமல் 37 மாணவர்கள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு பெற்றுள்ளனர்.மாணவி லாவன்யா 449 மார்க் பெற்று பள்ளி முதல் மாணவியாக உள்ளார். பெற்றோர்-ஆசிரியர் கழக,தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: நடுநிலைப்பள்ளி கடந்த 2007ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.முற்றிலும் கிராமப்பகுதி மாணவர் படிக்கும் இப்பள்ளியில் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது.நாங்கள் ஆசிரியர் ஏற்பாடுசெய்து மாணவர்களை தயார்செய்கிறோம்.நூறு சதவீதம் வெற்றி,என்றாலும் ஆசிரியர் இன்றி குறைந்த மார்க்கில் தேர்வு பெறுகின்றனர், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.