Pages

Sunday, June 23, 2013

பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்

அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பழநியிலுள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில், பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பயின்று, பி.எட்., பட்டம் பெற்ற மாணவர்கள், 2012 அக்டோபரில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, இந்தபடிப்பு பி.ஏ., வரலாறுக்கு இணையானது அல்ல; அதற்குரிய அரசாணை இல்லை, எனக் கூறி, ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனம் வழங்க மறுத்து விட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "அரசாணை வழங்கக்கோரி, மதுரை காமராஜ் பல்கலை, பதிவாளர் மூலம் உயர்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு 6 மாதமாகிறது. மேலும் தகவலறிய, சென்னை உயர்கல்வி அலுவலகத்திற்கு செல்லுங்கள், அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்" எனக் கூறி, கைவிட்டுவிட்டது.

தற்போது ஆசிரியர் தகுதிதேர்வு ஆக., 18 ல் நடைபெறவுள்ளது. பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டத்திற்கு அரசாணை இல்லாததால், தேர்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாணவர் பேச்சிமுத்து கூறுகையில், "பி.ஏ.,வரலாறு (வோக்கேஷனல்) பட்டத்திற்கு அரசாணை இல்லை, என பணி நியமனம் வழங்க மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தை கேட்டால், சென்னை சென்று கேட்க சொல்கிறார்கள்.

நாங்கள் கிராமப்புற ஏழை மாணவர்கள். சென்னைக்கு செல்லவோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியாத நிலையில் உள்ளோம். தமிழக முதல்வர் அரசாணை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என்றார்.

கல்லூரி முதல்வர் பிரபாகர் கூறுகையில், "பி.ஏ.,வரலாறு (வோக்கேஷனல்), அரசாணை வழங்கக்கோரி, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மூலம், உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

1 comment:

  1. we having B.sc maths C.A equivalent G.O and passed tet but TRB didn't give job till date

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.