Pages

Thursday, June 27, 2013

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளையும், குறைபாடுகளையும்
களையவேண்டும், மூவர்குழு அறிக்கைகளை வெளியிடும் முன் சங்கங்களை அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தினர் நேற்று பெரம்பலூரில் பாலக்கரையிலுள்ள கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப்பணியார் சங்க மாவட்டத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அறவாளி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் நல்லதம்பி, மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி பணியாளர்கள் சங்க மாநில கவுரவ தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவர் விடுதிப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜவர்மன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.