Pages

Wednesday, June 19, 2013

சிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக்கு 2வது இடம்

நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
நாட்டில் உள்ள பொறியியல், வணிக மேலாண்மை, மருத்துவம், சட்டம், அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழ கங்களில் சிறந்த கல்வி நிறுவனங்கள் சம்பந்தமாக இந்தியா டுடேவும், நீல்சன் நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் கருத்து கணிப்பு நடத்தி அதில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுகின்றன. 2013ம் ஆண்டுக்கான இந்தியாவில் சிறந்த பொறியியல் உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய கருத்து கணிப்புகளை மேற்கண்ட 2 நிறுவனங்களும் இணைந்து நடத்தின.

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், கல்வித்தரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி பணிகள், சமுதாய பணிகள், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் கல்வி பரிவர்த்தனைகள், தேர்ச்சி விகிதம், சிறந்த தொழில் முனைவோரை உருவாக்குதல், வளாக வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல், பல்வேறு நிறுவனங்களின் திறன்மிகு மையங்கள், வகுப்பறைகள், சர்வதேச தரத்திலான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துக் கணிப்பை நடத்தின.அதில் 2013ம் ஆண்டு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்கள், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் வி.ஐ.டி பல்கலை. 8வது இடத்திலும், தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் 2வது இடத்தில் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், வி.ஐ.டி பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவல் வி.ஐ.டி பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.