Pages

Thursday, June 27, 2013

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.