Pages

Sunday, June 30, 2013

பாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் எண்

பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன.
இதை தடுப்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. சைல்டு ஹெல்ப் லைன் என்ற பெயரில் 1098 என்ற தொடர்பு எண் கொடுக்கப்பட்டது. ஹெல்ப்லைன் இருப்பது குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் விதத்தில், முதல் கட்டமாக பிளஸ் 1 பாடப்புத்தகங்களில் நடப்பு கல்வியாண்டில் இந்த எண் அச்சிடப்பட்டுள்ளது. இது கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் என்பதால், எந்த தொலைபேசியில் இருந்தும் புகார் அளிக்கலாம். இதுகுறித்து பாடநூல் கழக உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்தாண்டு பிளஸ் 1 புத்தகங்களின் அட்டையில், ஹெல்ப்லைன் எண் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்த எண் அச்சிடப்படும்’’ என்றார். பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக, இந்த முயற்சியை எடுத்துள்ள அரசு, இதில் வரும் புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பெற்றோர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.