ஊதியம், பணி சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பினர் கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரதத்தில், மாநில பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிதம்பரம் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், ம.தி.மு.க., மாநில வெளியீட்டு அணி செயலர் வந்தியத்தேவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.பகுதி நேர ஆசிரியர் சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், கோவிந்தராஜி, பாக்கியராஜ், சத்தியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.உண்ணாவிரதத்தில், அரசாணை 177ல் உள்ள நடைமுறை சிக்கலை நீக்க வேண்டும். மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும். மகப்பேறு, காலவிடுப்பு, மருத்துவ விடுப்பு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்தினை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.