Pages

Saturday, June 15, 2013

எம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்குமா என அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்குமா என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்? பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் மட்டும் பெரும்பாலானோர் 200-க்கு 200 எடுக்க முடியாத அளவுக்கு சற்று கடினமாக இருந்ததால்,இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் 200-க்கு 199.75, 199.50 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகும். அதாவது, மருத்துவப் படிப்புக்கு உரிய பாடங்களில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 7 மாணவர்களும், 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 14 மாணவர்களும், 200-க்கு 199.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 33 மாணவர்களும் எடுத்துள்ளனர். ஆனால், 200-க்கு 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 75 பேர் தொடங்கி,அதற்குக் கீழே உள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டைப் போலவே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுத்துள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.சென்னை கல்லூரிகளில் இடங்கள் எவ்வளவு? சென்னை கீழ்ப்பாக்கத்தில் மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு (மொத்த இடங்கள் 2,065) மறு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,823 என்ற அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 140. சென்னை மருத்துவக் கல்லூரியில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டு இட விவரம்:- ஓ.சி.-44; பி.சி.-37; பி.சி. (எம்)-5; எம்.பி.சி.-28; எஸ்.சி.-21; எஸ்சிஏ-4; எஸ்.டி.-1.மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,823 என்ற அடிப்படையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 127. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டு இட விவரம்: ஓ.சி.-39; பி.சி.-34; பி.சி. (எம்)-4; எம்.பி.சி.-26; எஸ்.சி.-19; எஸ்சிஏ-4; எஸ்.டி.-1.மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,823 என்ற அடிப்படையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 128. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டு இட விவரம்: ஓ.சி.-40; பி.சி.-34; பி.சி. (எம்)-4; எம்.பி.சி.-26; எஸ்.சி.-19; எஸ்சிஏ-4; எஸ்.டி.-1.கட்-ஆஃப் எவ்வளவு? மேலே குறிப்பிட்ட சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) மாணவர்கள் சேர உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக அளிக்கப்பட்டுள்ளது.சென்னை 199.50 199.25 199.00 199.00 198.25 197.50 198.25ஸ்டான்லி 199.50 199.00 198.75 198.75 197.75 197.00 197.25கீழ்ப்பாக்கம் 199.25 199.00 198.50 198.50 197.25 196.00 195.50

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.