Pages

Sunday, June 23, 2013

பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்

புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.
தொழில்நுட்ப பயன்பாட்டை அதிக அளவில் உபயோகிக்கும் கால் சென்டர்கள் இன்றைய கலாச்சாரத்தின் ஒரு அடையாளமும் கூட. இந்தியாவில் 1998ல் கால் சென்டர்கள் நிறுவப்பட துவங்கின. சிறப்பான தகவல் வசதி, இன்டர்நெட் போன்ற மேம்பட்ட பயன்பாடு ஆகியவற்றை இவற்றில் காணலாம். சில ஆண்டு மந்தமான சூழலுக்குப் பின் தற்போது இவை மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளன. இதனால் இவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகம்.

வங்கி, கேடலாக் விற்பனை, பயன்பாடுகள், உற்பத்தி, செக்யூரிடி, வாடிக்கையாளர் சேவை, உணவுச் சேவை, ஏர்லைன்/ஓட்டல் ரிசர்வேஷன் போன்ற துறைகளில் கால் சென்டர்கள் துவக்கத்தில் பயன்பட்டாலும் தற்போது இவை பயன்படுத்தப்படாத துறையோ, பிரிவோ இல்லை என்றே கூறலாம்.

துவக்கத்தில் வாய்ஸ்பேஸ்ட் கால் சென்டர்கள் மட்டுமே இருந்தன. வாடிக்கையாளர் சேவைக்கான பல வடிவங்களை இன்று இவை அணிந்திருக்கின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கால் சென்டர்கள் இன்று அதிகமாக செயல்படுகின்றன.

ஆங்கிலமும் கம்ப்யூட்டர் திறனும் அதிகம் இருக்கும் இந்தியாவுக்கேற்ற துறை இது தான். ஓரளவு நல்ல சம்பளத்தைத் தரக்கூடிய துறையாக இது விளங்குவதால் நமது இளைஞர்கள் பலரின் கனவாக இது இருப்பதில் ஆச்சரியமில்லை. கால் சென்டர்களை திரைப்படங்கள் சில கிண்டல் அடித்தாலும் இந்திய பொருளாதாரத்திற்குக் குறிப்பிட்ட அளவில் சிறப்பாக இவை பங்காற்றி வருகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.