Pages

Friday, May 31, 2013

தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!

இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து காலரை உயர்த்தி விட்டு நிற்கின்றனர் மாணவ, மாணவியர்கள்.

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில்

தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%

இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.

எத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலிடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை  வெளியிடப்பட்டது. இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது  இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதமடித்தவர்கள்: கணிதம்:29,905
அறிவியல்:38,154

பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்

இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால், தேர்வு முடிவில், எந்த பிரச்னையும் ஏற்படாமல்,தேவையான முன்னேற்பாடுகளை கவனிக்க, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எழுத்தறிவு திட்டத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வருக்கு பாராட்டு

"கற்கும் பாரதம்" எழுத்தறிவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழகம், தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து, தமிழக முதல்வருக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள், பணியில் சேர வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள்

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, May 30, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு, நாளை முதல் விண்ணப்பம்

முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

நாளை காலை 9.15 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது.

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்

தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்கள்: அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில், கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் கல்வி திட்டங்களை மத்திய அரசு துணையோடு செயல்படுத்துவது குறித்த ஆலோசனை நடந்தது.

பிளஸ் 2 மாற்று சான்றிதழ்களில் குளறுபடி; பள்ளி நிர்வாகம் அலட்சியம்

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ், பிழை மற்றும் அடித்தல், திருத்தல்களுடன் வழங்கப் பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முடிவெடுக்கும் காலம்

மாணவர்கள் புதிய புதிய எண்ணங்களுடன் எதிர்பார்ப்புகளுடனும் கல்லூரியை தேர்வு செய்யும் அவசரத்திலும், நினைத்த கல்லூரி கிடைக்குமா? என்ற குழப்ப மிகுதியாலும் தவிப்புடன் வலம் வரும் காலம் தான் தேர்வு முடிவு

பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்

உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே. ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈகஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை தொடர்பான

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை / பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.13 முதல் 07.06.13 -க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-2014 ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று, மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் பெற்றனர்.

தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே நேற்று இடமாறுதல் பெற்றனர்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு

சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Wednesday, May 29, 2013

2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.

15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளை மையப்படுத்தும் மாற்றுக் கல்விமுறை

பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, சம்பிரதாய கற்பிக்கும் முறைகள், மறுஆய்வு செய்யப்படுகின்றன. வகுப்பறையோ, கரும்பலகையோ அல்லது வளாகமோ இல்லாத ஒரு பள்ளியை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு

"வாக்காளர் விழிப்புணர்வு முகாம், தேர்தல் பிரசாரம் போன்றவற்றில், சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது" என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்

"ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்" என, பயிற்சி வகுப்பில் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஜோஸப் அலெக்ஸாண்டர் பேசினார்.

பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்

தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.

வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:

ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ஏன் இந்த போலித்தனம்? - தலையங்கம்

கல்லூரித் தேர்வுகளில் தமிழ் மொழி நீக்கம் - திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம்' என்று செய்திகள் வெளிவந்தவுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உத்தரவை விலக்கிக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும்

வேலை வாய்ப்பு முன்னுரிமை பதிவில் முறைகேடு

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலை வாய்ப்பு முன்னுரிமை பதிவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும், 31ம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

சான்றிதழ்கள் வழங்க திணறும் அலுவலர்கள் கூடுதல் பணியாளர்கள் நியமனம் எப்போது?

பள்ளி, கல்லூரிகள் சேர்க்கைக்காக சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கேட்டு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள் குவிகின்றன. சரி பார்த்து சான்றிதழ் வழங்க நடப்பாண்டு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்படாததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது.

இந்தியாவில் மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service -களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்

பீகாரில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி, கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உரிமை சட்டம் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை: கோவா முதல்வர்

கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தி்ல் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு: முதல்வர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை

அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்

இதுகுறித்து அவர் tnkalviக்கு அளித்த பேட்டியில், அரசாணை எண்.216 இதுவரை அமுல்ப்படுத்தாமலேயே இருந்தது, இதை அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர். அரசாணை எண்.216 என்பது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசால் போடப்பட்ட ஆணையாகும். இந்த ஆணையை தமிழக அரசு இதுவரை அமுல்ப்படுத்தாத காரணத்தால் தான் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது, அரசும் அடிக்கடி வாய்தா வாங்கி கொண்டு இருந்தது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்துக்கு டிக்கெட் புக்கிங் 2000லிருந்து 7,200ஆக உயர்த்த முடிவு

ரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நிமிடத்தில் 2,000 டிக்கெட்டுகளை மட்டுமே இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.

அண்ணாபல்கலைக்கழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கட் ஆப்

சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் கட் ஆப் மார்க் எப்படி கணக்கிடப்படும் என்று கேட்டதற்கு

கல்வி கற்பது அடிப்படை உரிமை! இலவசமாக வழங்குவது அரசின் கடமை! - நாளிதழ் செய்தி

தமிழக அளவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கூட 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும் பல பள்ளிகளில் 22 முதல் 38 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்

"இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.

தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத் தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால்,

தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ் பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் எச்சரிக்கை தேவை

கடந்த சில ஆண்டுகளாகவே விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவரகள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கடந்த பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, 28 பவுன் நகை பறிக்கப்பட்டதாக, 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Know the Shortcut Keys; Enjoy life Easy More than 100 Keyboard Shortcuts.

Keyboard Shorcuts (Microsoft Windows) 
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)

புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு

வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் புதுச்சேரியை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் ஜூன்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை துவக்கம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.

மே 28-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளித்திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு - ராஜ் நியூஸ்

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்-3ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*F தாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டு சுத்தமாக பொய்த்துப்போனது.

ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு

M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது. உயர்பதவியான முதுநிலை ஆசிரியராக நியமனம் பெற்றால் மாதம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.1152 வீதம் இழப்பு ஏற்படும். எப்படியெனில்,

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.

கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுத கூடாது என்று உத்தரவு வந்ததா? கல்லூரி கல்வி இயக்குனர் விளக்கம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு

"சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர்க்க வேண்டியதில்லை" - கேரள உயர்நீதிமன்றம்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும் தேர்வு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது.

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Sunday, May 26, 2013

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கல்வி அலுவலக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்

"கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்; பொருளாதார பிரச்னை, எப்போதும் கல்விக்கு குறுக்கே தடையாக நிற்கக்கூடாது," என கலெக்டர் கோவிந்தராஜ் பேசினார்.

அதிக மதிப்பெண் பெற்றால் மேல்நிலை கல்வி பயில வாய்ப்பு: கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அஹமது வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த

ஆசிரியர் பயிற்சி: மே 27 முதல் விண்ணப்பம் வினியோகம்

"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2விற்கு பின், உயர்கல்வியில், மருத்துவ படிப்பே, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பை ஒப்பிடும்போது, மருத்துவ படிப்பிற்கு, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில், ஆண்டுதோறும், மாணவர்கள் மத்தியில், கடும் போட்டி நிலவி வருகிறது.

Saturday, May 25, 2013

முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.


மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்

பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை

1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்க கல்வித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்

முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்

ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு

ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய் வில் தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல் பெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சட்டப்படி உரிமையை பெற ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை

2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.

உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது. எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே, இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை

தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அறிக்கை சமர்ப்பித்தது.

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்

பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலையில் கிடந்த அண்ணாமலைப் பல்கலை தேர்வு விடைத்தாள்

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா

நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.

அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ

"தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Friday, May 24, 2013

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இயக்குநர்

இன்று (மே 24) நடப்பதாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்', தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

Thursday, May 23, 2013

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் நேற்று முதல் வினியோகம் ஆரம்பம்

நேற்று முதல் புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுகங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இருக்கும்.

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை

ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த

ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?

''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உதயமாகும் புதிய படிப்புகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.

மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்

மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த கலந்தாய்‌வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவி்த்துள்ளது.

சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த எலச்சிபாளையத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மோகனூர் வட்டார பொருளாளர்

Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)

This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancy download                             
Advance Tamil download
Bio-Botany  download
Bio-chemistry download
Bio-Zoology download

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 

>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவு 28–ந்தேதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை

கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான புதிய பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்படுமா?

தமிழகத்தில் கல்வித்துறை கடந்த 20ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக நடந்தது. தொடந்து, முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்களுக்கு உதவும் தகவல் மையம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை: தமிழக அரசு

"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை குளறுபடி: பதவி உயர்வு பாதிப்பில் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி

பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

"பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, May 22, 2013

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்~~~~

வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியேபோதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

தானியங்கி முறை சம்பளம் வழங்கலில் குளறுபடி : அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு கருவூலக் கணக்குத்துறையில் அரசு ஊழியர்களுக்கான சம்ப ளம் வழங்குவதற்கு தானி யங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

போலி சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வு: அரசு அலுவலர் மீது வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக வணிகவரித் துறை அலுவலர் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

Ï¥gæ‰ÁtF¥òfŸghlthçahf Ñœ¡f©l gŸëfëš eilbgwΟsJ
       Kjš R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 29.05.2013 k‰W« 30.05.2013
       Ïu©lh« R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 31.05.2013 k‰W« 01.06.2013

ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.

490 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும், பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தொடக்க பள்ளியில் விஷ ஜந்துக்கள்: மாணவர்கள் அச்சம் - நாளிதழ் செய்தி

அச்சிறுப்பாக்கம்: எடையாளம் தொடக்கப் பள்ளியில், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர்.

பல்லுயிர் பரவினால் உலகம் செழிக்கும்: இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர் கூட்டம்

கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.

20 வினாடிகளில் சார்ஜ் ஏற்றும் மொபைல் சார்ஜர்: இந்திய மாணவி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் வாழும், இந்திய வம்சாவளிப் பெண், 20 - 30 வினாடிகளில், மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை, சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா : முதல்வருக்கு அழைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஆர். தாண்டவன், இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வரை சந்தித்தார்.

நலத்திட்டங்கள் கிடைக்கவில்லையா? கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றுகள் பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Tuesday, May 21, 2013

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மே-25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் - நாளிதழ் செய்தி

தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மாறுதல் பெற்றும் விடுவிக்காததால் சர்ச்சை - நாளிதழ் செய்தி

அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியப் பயிற்றுனர்கள், கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் பெற்றும், பணியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது.

தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்

கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

"பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார்.

மருத்துவ படிப்புக்கு 28,300 பேர் விண்ணப்பம்: ஜூன் 6ல் தரவரிசை பட்டியல்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம் தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடிவமைப்பு குறைந்த மின்சாரத்தில் ஒளிரும்

காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது சிந்தனையில் உதித்த தெரு விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு

"தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை. இதனைத் தெளிவிக்கப் பல அரசாணைகளும் பல தெளிவுரைகளும் வெளியானபோதும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?

சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கல்லூரிகள், மாணவர்கள், பிற மாநில மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள கோவையை, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Monday, May 20, 2013

ஆங்கில மொழித்திறன் பயிற்சி நுழைவுத்தேர்வு: 803 பேர் பங்கேற்பு

அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.

தலைமை ஆசிரியர் பதவிக்கு கடும் போட்டி: முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு - நாளிதழ் செய்தி

தலைமையாசிரியருக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில், முக்கிய பள்ளிகளை பிடிப்பதில், ஆசிரியர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடம் பட்டியல் வெளியிடாததால், முறையாக நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் - நாளிதழ் செய்தி

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் கட்டணத்தை தாறுமாறாக வசூலித்து வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம் - நாளிதழ் செய்தி

கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று (மே 20) கடைசி நாளாகும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்

ஒரு காலத்தில் படிக்க வழியின்றி, கூலி வேலைக்கு சென்ற குழந்தை தொழிலாளர்கள், தற்போது பிளஸ் 2 தேர்வில், 1,000 மதிப்பெண் எடுத்து, சாதனை படைத்துள்ளனர். இவர்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.

Sunday, May 19, 2013

ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்வு இல்லை ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம்

ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 54 புதிய ஆரம்ப பள்ளிகளை துவக்கவும், 50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பு

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

முத்துக்கள் பத்து !

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒரு நாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான ~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE

"கருத்துக் கேட்பு கூட்டமாக" மாறிய கவுன்சிலிங், ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம், கருத்துக் கேட்புக் கூட்டமாக மாற்றப்பட்டதால், பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நாளை ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், தென் மாவட்டங்களில் குறைந்த சீட்; அதிக போட்டி

பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை திடீர் நிபந்தனைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.

கவுன்சலிங்கில் திடீர் மாற்றம் : நாளை ஆசிரியர்கள் கலந்தாய்வு - நாளிதழ் செய்தி

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) துவங்குகிறது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எனவே அனைத்து வகையான கலந்தாய்விற்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பங்கேற்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

தமிழக ஒட்டு மொத்த வரலாற்றில் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்காக நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 
22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி குறைவு: டி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை - நாளிதழ் செய்தி

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு காரணமான, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"

அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்படும் குழு, பெயரளவில் செயல்படுவதாக, கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

"குரூப்-2 தேர்வில், தேர்வு பெற்று, மூன்று மாதங்களாக பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தேர்வர்கள், விரைவில் பணி நியமனம் பெற, நடவடிக்கை எடுக்கப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் தெரிவித்தார்.

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்

தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் எனக்கு இல்லை.

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

"மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த, தனியார் பள்ளி, பாதிக்கப் பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ரத்து - TNGTA

கடந்த ஆண்டில் பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து தற்பொழுது நிலையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுகேற்ப இன்றைய பணி நிரவல் ஆசிரியர்களுக்கான நடக்கவிருந்த கலந்தாய்வை ரத்து செய்ய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை - அரசு செயலர் உத்தரவு

"ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்,'' என, பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம் :அதிகாரி தகவல்

"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம்போல் இயங்கலாம்' என, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

2013-14ம் கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குகான பொதுமாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநிரவலில் மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம், மாவட்டத்திற்குள் வேறு பள்ளிகளுக்கு மாறுதலில் சென்றவர்கள், அயற்பணியில் பணியாற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நேர்முக உதவியாளர் (மேல்நிலை, உயர்நிலை) நிலையில் பணியாற்றி வருவோரில் 2013-14ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு 18ம் தேதி முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வியோடு... கழனிக் கல்வியும்! வியக்க வைக்கும் விவேகானந்தா வித்யா வனம்!

''வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பாடப் புத்தகத்தை மட்டும் உருவேற்றும் கல்வி முறை, கல்வியில் சிறந்த மாணவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், சிறந்த மனிதர்களை உருவாக்குவதில்லை.

புத்தகம் விலை உயர்வு

கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 21ல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர, பொதுக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பல்கலையில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான படிப்புகளில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

Friday, May 17, 2013

ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

2013-14ம் கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குகான பொதுமாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநிரவலில் மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம், மாவட்டத்திற்குள் வேறு பள்ளிகளுக்கு மாறுதலில் சென்றவர்கள், அயற்பணியில் பணியாற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நேர்முக உதவியாளர் (மேல்நிலை, உயர்நிலை) நிலையில் பணியாற்றி வருவோரில் 2013-14ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு 18ம் தேதி முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 9 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குத் தடை

தருமபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 9 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

வணக்கம், மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண் 177 பள்ளிக்கல்வித்(சி2) துறை நாள் 11.11.2011) S.S.A மூலம் இடைநிலை வகுப்புகளுக்கு உடற்கல்வி, கணினி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்பேச்சு போன்ற பாடங்களில் மாணவர்களின் கல்வியை ஊக்குவித்திட தமிழகம் முழுவதும்

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கும் வகையில் 3 மையங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

"டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1 முதன்மைத் தேர்வில், 1,330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால் மூலமாகவோ, தேர்வாணைய இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.