Pages

Thursday, May 30, 2013

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்

தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தின் முடிவு, ஜூன் மாதத்தில் அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.

மாணவர்கள் நலன் கருதி, கல்வியாண்டு துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு "கவுன்சிலிங்" நடத்தி முடிக்கப்படும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர்கள் பொறுப்பு ஆய்வாளர்களாகவே நீடிக்கின்றனர்.

மாநிலத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.