இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால், தேர்வு முடிவில், எந்த பிரச்னையும் ஏற்படாமல்,தேவையான முன்னேற்பாடுகளை கவனிக்க, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், தொடக்க கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்,கோவை மாவட்டத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர்,தேவராஜன், கடலூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், முகம்மது அஸ்லம், ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர், கண்ணப்பன் என, ஒவ்வொருவருக்கும், தலா ஒரு மாவட்டம் வீதம், பிரித்து தரப்பட்டுள்ளன.
இதையடுத்து, அனைத்து அதிகாரிகளும்,நேற்று மாலை, அந்தந்த மாவட்டங்களுக்கு, புறப்பட்டுச் சென்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.