Pages

Wednesday, May 22, 2013

தொடக்க பள்ளியில் விஷ ஜந்துக்கள்: மாணவர்கள் அச்சம் - நாளிதழ் செய்தி

அச்சிறுப்பாக்கம்: எடையாளம் தொடக்கப் பள்ளியில், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ள எடையாளம் கிராமத்தில், ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இதில், 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு, கடந்த கல்வியாண்டில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது, பள்ளி கட்டடத்தின் பின்புறம், ஏராளமான செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி உள்ளதால், வளாகத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

பள்ளி வளாகத்தில், அடர்ந்துள்ள செடி, கொடிகளை பள்ளி நிர்வாகத்தினர் அகற்றாமல் உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றவும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.