Pages

Wednesday, May 22, 2013

நலத்திட்டங்கள் கிடைக்கவில்லையா? கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றுகள் பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் அது குறித்து உடனடியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம்.

அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எவரையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு சம்பந்தமில்லாமல் வெளி நபர்கள் எவரேனும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி பணிகளில் ஈடுபட்டாலோ, இடையூறுகள் செய்தாலோ கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவர்களின் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும், விவரம் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 வரை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 2526 8323 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த வசதி மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.