Pages

Thursday, May 23, 2013

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை

கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஜூனில் பள்ளி திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கி, பள்ளி திறக்கும் போது, ஆசிரியர்கள் காலிபணியிடம் இன்றி இருக்க, கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இம் மாதம் முழுவதும், அந்தந்த மாவட்டங்களில், இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது.

முதற்கட்டமாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தது. தொடர்ந்து முதுகலை ஆசிரியர், பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே 30 வரை நடக்கிறது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், எந்தவித முறைகேட்டிற்கும் இடமின்றி செயல்பட கல்வித்துறைக்கு அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்ததால், மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விபரங்கள், பதிவு மூப்பு போன்றவற்றை, அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்கள் மூலம், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அங்கு, மாநில அளவில் பதிவு மூப்பு ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, "ஆன்-லைனில்" வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கி, உத்தரவுகள் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மகிழ்ச்சி: கடந்த ஆண்டு வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஆசிரியர் காலிபணியிடங்கள் ஒதுக்கி, இடமாறுதல் வழங்கப்படும். இதில், எம்- லிஸ்ட் எனக்கூறும், அமைச்சர்கள் பரிந்துரைக்கும், நகர்புற பள்ளிகளை மறைத்து,
காலியிடம் வெளியிடப்படும்.

இவ்வாண்டு, "ஆன்-லைனில்" ஆசிரியர்களே நேரடியாக விபரத்தை பதிந்து, மாநில பதிவு மூப்பு படி, எங்களது நேரடி பார்வையில் இடங்களை தேர்வு செய்கிறோம். இதில், முறைகேட்டிற்கு வழியில்லை.

பிற மாவட்ட மாறுதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை நாங்கள், ஒரே இடத்தில் ஆன்-லைனில் தேர்வு செய்கிறோம். இந்த நேர்மையான கவுன்சிலிங் பணியிடமாறுதலால், மகிழ்ச்சி அடைகிறோம் என, தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.