பள்ளிக்கல்வித்துறை
சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும்
25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி
உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது.
அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா
இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.
ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.