Pages

Tuesday, May 28, 2013

தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ் பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த தகவல்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தில், பேராசிரியர் இஸ்மாயில் விண்ணப்பித்திருந்தார். பணி நியமன முறைகேடு குறித்து, மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார்.

விசாரணையில், அவருக்கு தகவலோ ஆவணங்களோ பல்கலை தரவில்லை. ஆவணங்கள் தராததை கண்டித்து, மாநில தகவல் ஆணையம், பல்கலைகழகத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்துள்ளது. பத்து நாட்களுக்குள், உரிய ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகையை, பல்கலைக்கழக பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து பிடித்தம் செய்து, உரிய அரசு கணக்கில் செலுத்தி, அந்த விவரத்தை, பல்கலை பதிவாளர், ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. use efficiently use RTI Act-2005.For help Email to perumalthanagarajan@gmail.com

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.