Pages

Wednesday, May 29, 2013

தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு

"வாக்காளர் விழிப்புணர்வு முகாம், தேர்தல் பிரசாரம் போன்றவற்றில், சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது" என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தும் சட்டம், 1986ன் படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஓட்டல், வணிக நிறுவனங்களில் பணியமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது, நோட்டீஸ் வழங்குதல், பேனர்களை பிடித்து செல்லுதல் போன்ற பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரத்தின் போது, கொடி பிடிக்கவும், வாக்குறுதி நோட்டீசுகளை வினியோகிக்கவும், சின்னங்களை காண்பித்து ஓட்டு சேகரிக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றன. இது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்திற்கு எதிரானது.

வரும் காலங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நோட்டீஸ் உள்ளிட்டவைகளை வினியோகிக்கவும் தேர்தல் பிரசாரம் சார்ந்த பொருட்களை எடுத்து செல்லுதல் போன்ற பணிகளில் அரசியல் கட்சியினர் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.