Pages

Thursday, May 23, 2013

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவு 28–ந்தேதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. சார்பில் இந்தியா முழுவதும் 12–வது வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 17–ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 13 நாட்கள் ஆகிவிட்டன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் மார்க் தெரியாமல் எந்த படிப்பிற்கு செல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போது தேர்வு முடிவு வரும் என்று தினமும் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28–ந்தேதியும் வரவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.