Pages

Wednesday, May 22, 2013

20 வினாடிகளில் சார்ஜ் ஏற்றும் மொபைல் சார்ஜர்: இந்திய மாணவி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் வாழும், இந்திய வம்சாவளிப் பெண், 20 - 30 வினாடிகளில், மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை, சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
வழக்கமாக, ஒரு மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்திற்காக, பேட்டரியை சார்ஜ் ஏற்ற, அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. மிகக் குறுகிய நேரத்தில், 20 - 30 வினாடிகளில் மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளும் சூப்பர் கெபாசிட்டர் கருவியை, ஈஷா கரே, 18, என்ற இந்திய பெண் கண்டுபிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடிப்பை, கூகுள் இணையதளம் பாராட்டியுள்ளது. அது போல், இன்டெல் எனப்படும் கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமும் பாராட்டி, ஈஷாவுக்கு, "இளம் விஞ்ஞானி" விருது வழங்கியுள்ளது. இதற்காக, அந்தப் பெண்ணுக்கு 27 லட்ச ரூபாய் பரிசும் கிடைத்துள்ளது.

"என் மொபைல் போன் பேட்டரியை, அடிக்கடி, ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. விரைவில் ரீசார்ஜ் செய்ய என்ன செய்யலாம் என, ஆராய்ந்த போது தான், நானோ தொழில்நுட்பம் கைகொடுத்தது. அதை பயன்படுத்தி, இந்தக் கருவியை கண்டுபிடித்தேன்," என்றார்.

இந்த கருவியை, மொபைல் போன், கேமரா போன்ற டிஜிட்டல் சாதனங்களில் உள்ள பேட்டரிகளில் மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும்; எடை குறைவானது என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.