Pages

Thursday, May 30, 2013

தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் பெற்றனர்.

தமிழகம் முழுவதும் 2,966 பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே நேற்று இடமாறுதல் பெற்றனர்.
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற 5 ஆயிரம் பேரில் 2,966 பேர் இடமாறுதல் பெற்றனர்.

மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. இடமாறுதல் கோரியவர்கள் அனைவரும் இன்று காலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.