Pages

Wednesday, May 22, 2013

போலி சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வு: அரசு அலுவலர் மீது வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக வணிகவரித் துறை அலுவலர் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் லோகநாதன். இவர் 2000-வது ஆண்டில் இளநிலை கணக்கியல் படிப்பு சான்றிதழ் சமர்ப்பித்து துறைரீதியான பதவியை கோரினாராம். அதைத் தொடர்ந்து அவருக்கு 2003-ல் உதவி வணிகவரி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இப்போது அவர் சேலம் வணிகவரி ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சத்தியமங்கலம் வட்ட உதவி வணிகவரி அலுவலராக பணிபுரிகிறார்.

இந்நிலையில், லோகநாதன் பதவி உயர்வுக்காக அளித்த சான்றிதழ் போலியானது என தெரிய வந்ததை அடுத்து வேலூர் வணிகவரி உதவி ஆணையர் கஜபதி, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். லோகநாதன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.