Pages

Saturday, May 25, 2013

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்

பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
சென்னை, சேலையூரில் சிறுமி ஸ்ருதி, பள்ளி பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து பலியானாள். இதையடுத்து, பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் இயக்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தது. ஓட்டுநருக்கு, ஐந்து ஆண்டு அனுபவம், உதவியாளர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்று இருப்பதுடன், குழந்தைகளை கையாளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை , மாதம் ஒருமுறை கூட்டி, வாகனங்கள் பராமரிப்பு, ஓட்டுநர், உதவியாளர் குறித்து கருத்து கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இதையடுத்து, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரும், ஜூன், 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதையடுத்து, பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றுப்படுவது குறித்து, கண்காணிக்க போக்குவரத்து துறை, தீவிரமாக களம் இறங்கவுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், அந்தந்த பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., தலைமையில், 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, பரிசோதிக்கும் பணியை துவங்கவுள்ளோம். நாளை(இன்று), சென்னையில் நடைபெறவுள்ள போக்குவரத்து அதிகாரிகள் மத்தியிலான ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.