Pages

Thursday, May 23, 2013

உதயமாகும் புதிய படிப்புகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், அதிகமானோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500யை தாண்டி விட்டது. ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மற்ற இடத்தில் உள்ள மாணவர்களுக்கும் சென்றடைகிறது.

சமுதாய சிக்கல்களை தீர்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை, இன்ஜினியர்கள் உருவாக்க வேண்டும். மருத்துவம், எரிசக்தி, நவீன கம்ப்யூட்டர்கள், தொலைதொடர்பு போன்ற துறைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த, இன்ஜினியரிங் அவசியம்.

 மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நீர்வளம், வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவைகளை, இன்ஜினியரிங் துறையின் உதவியுடன் தான் சமாளிக்க முடியும்.

பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி, இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், போட்டோனிக்ஸ் போன்ற துறைகள் எதிர்காலத்தில் வளர்ச்சியை சந்திக்கும் என நம்பப்படுகிறது.

காயமடைந்த, பாதிப்படைந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்புகளையும், திசுக்களையும் சீராக்குவதன் குணப்படுத்த பயோடெக்னாலஜி ஆய்வுகள் நடந்து வருகின்றன. பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்துக்கும் இன்ஜினியரிங் அறிவு அவசியம்.

நானோ சயின்ஸ், நானோ இன்ஜினியரிங் ஆய்வுகள் பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கும் நமக்கு உதவுகின்றன.

செயற்கை உறுப்புகளை தயாரிக்கவும், சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தவும் நானோபொருட்கள் உதவுகின்றன.

பொருளின் அளவை குறைக்கவும், அதன் திறனை மேம்படுத்தவும் போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

இயற்கை பேரிடர்களை முன் கூட்டியே அறியும் வகையிலான பொருட்களை உருவாக்குவது பற்றி, மெட்டீரியல் சயின்ஸ் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இன்ஜினியர்கள், தொழில்நுட்ப, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான வரையறைக்குள் செயல்பட்டு, சாதிக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.