Pages

Friday, May 17, 2013

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

"டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1 முதன்மைத் தேர்வில், 1,330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால் மூலமாகவோ, தேர்வாணைய இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து, நிருபர்களிடம்நேற்று அவர் கூறியதாவது: துணை ஆட்சியர் - 8, காவல் துறை கண்காணிப்பாளர் - 4, உதவி ஆணையர் (வணிக வரி) - 7, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் - 1 உள்ளிட்ட, 25 காலிப் பணியிடங்களுக்கு, பிப்., 16ம் தேதி தேர்வு நடந்தது. இந்த குரூப்-1 முதன்மைத் தேர்வை, 75,629 பேர் எழுதினர். இதில், 1,330 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

தேர்வு பெற்றவர்கள், தபால் மூலமாகவோ, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலோ, வயது, கல்வி உள்ளிட்ட தகுதி சான்றிதழ்களை, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தகுதி சான்றிதழ்களை பதிவு செய்யாதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்.

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இறுதிப் பட்டியலில் உள்ளவர்கள், அடுத்த முதன்மை எழுத்துத் தேர்வு, நேரடி தேர்வில் கலந்து கொள்வர். முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, நவநீத கிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.