Pages

Thursday, May 23, 2013

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கால்நடை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப உள்ளிட்ட இளநிலை பட்ட படிப்புகளில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் உள்ள, 18 மையங்களில், கடந்த, 13ம் தேதி துவங்கி, வரும், 31ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன், 3ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 600 ரூபாய்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 300 ரூபாய். வரும், 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளன.

எனவே, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்போர், பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பலாம். ஆனால், அதன் பிறகு, 3ம் தேதிக்குள் அனுப்புவோர், அசல் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து, பல்கலைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.