Pages

Thursday, May 23, 2013

சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஆசிரியர்களுக்கான ‘மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை’ ஆண்டுக்கு இரண்டு (ஜனவரி, ஜூலை) முறை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, மத்திய தீபத்திய பள்ளிகள், அந்தமான் நிக்கோபார், சண்டிகர் போன்ற யூனியன் பிரேதேசங்களில் உள்ள மத்திய பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.

இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் 1ம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் இரண்டையும் எழுதலாம். 1 முதல் 8 வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள், இரண்டு தாள்களையும் எழுதலாம்.

இத்தேர்வுக்கு ஏப்.16 வரை விண்ணப்பிக்கப்பட்டு, தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட முக்கிய நகரங்களில் ஜூலை 28 அன்று காலை, மாலை என நடக்க இருக்கிறது.

ஜூலை 3 முதல், ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம். கடந்த ஆண்டு வரை 1.30 மணிநேரமாக இருந்த தேர்வு நேரம், 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாள் 1 காலை 9.30ல் தொடங்கி நன்பகல் 12.00 மணி வரையிலும், தாள் 2, மாலை 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.