Pages

Tuesday, May 28, 2013

அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்

இதுகுறித்து அவர் tnkalviக்கு அளித்த பேட்டியில், அரசாணை எண்.216 இதுவரை அமுல்ப்படுத்தாமலேயே இருந்தது, இதை அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர். அரசாணை எண்.216 என்பது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசால் போடப்பட்ட ஆணையாகும். இந்த ஆணையை தமிழக அரசு இதுவரை அமுல்ப்படுத்தாத காரணத்தால் தான் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது, அரசும் அடிக்கடி வாய்தா வாங்கி கொண்டு இருந்தது.
இறுதியாக வருகிற ஜூன் 3ம் தேதிக்குள் அமுல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு வரும் அதே நாளில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே  கூறியுள்ளது. மேலும் அதே நாளன்று (ஜூன் 3ம் தேதி) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த நாளில் அமுல்படுத்துவதற்கான ஆணை வெளியிட தமிழ்நாடு அரசு புள்ளி விவரங்களை திரட்டி தயார்ப்படுத்தி கொண்டு இருக்கிறது. எனவே வருகிற ஜூன் 3ஆம் தேதி அரசாணையை வெளியிட்டு அதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது என்பதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.