இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.
பள்ளியில் உணவு அளிப்பது என்பது, தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்யும். இது குழந்தைகளுக்காக செய்யும் சிறந்த முதலீடாகும். இதனால் குழந்தைகள், சுகாதாரத்துடன், வலு மிக்கவர்களாக விளங்குவர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 1960-ல் அப்போதைய முதல்வர் கே.காமராஜால் கொண்டு வரப்பட்டது.
வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக இத்திட்டத்தை அவர் கொண்டு வந்தார். இத்திட்டம் இப்போது மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் 169 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் 3.6 கோடி குழந்தைகள் நாள்தோறும் ஒருவேளை உணவை பள்ளியில் பெறுகின்றன. ஏழை நாடுகளில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு தான் உணவு கிடைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 38 நாடுகளில் மத்திய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
குறிப்பாக விலை உயர்வு, எரிபொருள் பெறுவதில் சிக்கல், இயற்கை பேரழிவு போன்றவற்றால் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது என்று எர்தாரின் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.