Pages

Saturday, May 18, 2013

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி குறைவு: டி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை - நாளிதழ் செய்தி

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு காரணமான, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு ஆசியர்களே காரணம் ஆவர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில், நேற்று விருத்தாசலம் டி.இ.ஓ., அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி தலைமையில் ஊர்வலமாக வந்து, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் செந்தாரைக்கந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். போலீசார், முற்றுகையிட்ட, 25 பேரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.