Pages

Sunday, May 26, 2013

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
வரும், 28ம் தேதி, மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. மறுநாள், 29ம் தேதி, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களுக்கு, பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கும்.

இரு நாட்களிலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் ஆகியோருக்கும் இதே தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

"ஆன்-லைன்" வழியில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.