தமிழ்நாடு பி.எட். கணிணி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்கத்தினர் இன்று திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிகளில் 6 முதல் 10–ம் வகுப்பு வரை கணிணி அறிவியலை கட்டாய படமாக்கி அதற்கு கணிணியில் பி.எட். படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணிணி ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசு பள்ளிகளில் 10–க்கும் மேற்பட்ட பணிகள் கணிணியை சார்ந்தே இருப்பதால் கணிணி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு அருணாசலம் தலைமை தாங்கினார்.
ராமச்சந்திரன் வரவேற்றார். ஜான் கிறிஸ்டோபர், கிப்சன், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான கணிணி அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment